கஞ்சா விற்ற கல்லூரி மாணவர் கைது
கஞ்சா விற்ற கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு போலீசார் பஸ் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது, சந்தேகத்தின் பேரில் வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியதில், காஞ்சீபுரம் மாவட்டம் முத்தேல்பேட்டை பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் நவீன் (வயது 20) என்பதும், காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி 2-ம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அவரை சோதனை செய்த போது, கஞ்சா பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து செய்யாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்து, நவீனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.