கல்லூரி பேராசிரியர் விஷம் குடித்து தற்கொலை
தந்தை இறந்த சோகத்தில் கல்லூரி பேராசிரியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;
தஞ்சாவூர்;
தந்தை இறந்த சோகத்தில் கல்லூரி பேராசிரியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கல்லூரி பேராசிரியர்
தஞ்சை மாதாக்கோட்டை சாலை மோனிசா நகரை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்(வயது 50). இவர், தஞ்சை சரபோஜி கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவருடைய தந்தை கருப்பையன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். தாய் உடல் நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார்.தனது தந்தை இறந்து விட்டதாலும், தாய்க்கு உடல் நிலை சரியில்லாமல் உள்ளதாலும் மிகுந்த மனஅழுத்தத்தில் ஜெயபிரகாஷ் இருந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே விஷம் குடித்துள்ளார்.
உடல் நிலை சரியில்லை
சிறிது நேரத்தில் தனக்கு உடல் நிலை சரியில்லை என்றும், ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர வேண்டும் என்றும் தனது மனைவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு கூறியுள்ளார். உடனே விரைந்து வந்த அவர் தனது கணவரை தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.அங்கு பரிசோதனை செய்ததில் அவர் விஷம் குடித்திருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜெயபிரகாஷ் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தாா். இதுகுறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.