கல்லூரி கனவு திட்ட பயிற்சி
சங்கராபுரம் அரசு பள்ளியில் கல்லூரி கனவு திட்ட பயிற்சி நடைபெற்றது.;
சங்கராபுரம்,
சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு திட்டபயிற்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனியாப்பிள்ளை தலைமை தாங்கினார். மாவட்ட கருத்தாளர் மணியன், மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் சீனுவாசன் வரவேற்றார்.
இதில் உயர்கல்வி பயில்வதற்கான வழிகாட்டுதல்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆசிரியர் பயிற்றுனர்கள் சரசு, குப்புசாமி, ஸ்டாலின், பாலகிருஷ்ணன் மற்றும் சங்கராபுரம் ஒன்றியத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர்கள், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.