தொழில் முனைவோரின் செயல்பாடு குறித்து கலெக்டர் ஆய்வு

ஆற்காட்டில் தொழில் முனைவோரின் செயல்பாடு குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.;

Update: 2023-07-06 17:54 GMT

ராணிப்பேட்டை மாவட்ட தொழில் மையத்தின் மூலம் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆற்காடு நகராட்சி செய்யார் பைபாஸ் சாலையில் யோகேஷ் என்பவர் ரூ.18 லட்சம் கடன் உதவி பெற்று வாகனத்தின் சக்கரம் சீரமைப்பு செய்யும் தொழில் செய்து வருகிறார்.

இதனை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு, செயல்பாடுகள் குறித்து கலெக்டர் விவரித்தார். அப்போது மாவட்ட தொழில் மைய மேலாளர் ஆனந்தன், உதவி பொறியாளர் வசந்தகுமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்