சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவிக்கு கலெக்டர் பாராட்டு
தேசிய குண்டுஎறிதல் போட்டியில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவிக்கு கலெக்டர் செந்தில்ராஜ் பாராட்டு தெரிவித்தார்.;
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் 25-வது தேசிய அளவிலான காதுகேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோருக்கான தடகள போட்டி நடந்தது. இதில் குண்டு எறிதல் போட்டியில் தூத்துக்குடி மில்லர்புரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி ஆர்.பிரீத்தி பிச்சம்மாள் கலந்து கொண்டு விளையாடினார். இதில் 3-வது இடம் பிடித்து வெண்கல பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்றார். இதனை தொடர்ந்து பதக்கம் மற்றும் சான்றிதழை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்போது, இது போன்ற பல பதக்கங்களை பெற ணே்டும் என்று கலெக்டர் வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார், துணை ஆட்சியர் (பயிற்சி) பிரபு, மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ், தூத்துக்குடி மாவட்ட தடகள கழக செயலாளர் பழனிச்சாமி, பொருளாளரும் பயிற்சியாளருமான அருள்சகாயம், மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் மெய்கண்டன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.