காலை உணவை சாப்பிட்டு ஆய்வு செய்த கலெக்டர்

புதுஅத்திக்கோம்பை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை கலெக்டர் பூங்கொடி ஆய்வு செய்தார்.

Update: 2023-09-05 19:45 GMT

திண்டுக்கல் மாவட்டத்தில் 1,111 பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் 58 ஆயிரத்து 330 மாணவ-மாணவிகள் தினமும் பள்ளிகளில் காலை உணவு சாப்பிட்டு வருகின்றனர். இந்த நிலையில் புதுஅத்திக்கோம்பை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை கலெக்டர் பூங்கொடி நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்கு தயார் செய்து வைத்திருந்த உணவை கலெக்டர் சாப்பிட்டு பார்த்தார். மேலும் காலை உணவு சமைக்கும் அறை, உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை கலெக்டர் பார்வையிட்டார். அதையடுத்து ஆசிரியர்கள், சமையல் பணியாளர்களுக்கு கலெக்டர் பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்.

அப்போது மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் பணியை ஆசிரியர்கள் முறையாக கண்காணிக்க வேண்டும். மாணவர்கள் உணவு சாப்பிடும் தட்டுகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். மேலும் காலை உணவை சத்தான உணவாக தயாரிக்க வேண்டும். அரசு வழங்கிய அட்டவணையின்படி ஒவ்வொரு நாளும் மாணவ-மாணவிகள் விரும்பி சாப்பிடும் வகையில் உணவு சமைத்து கொடுக்க வேண்டும், என்றார். இந்த ஆய்வின் போது பழனி ஆர்.டி.ஓ. சரவணன் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்