மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கிய கலெக்டர்

மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்களை கலெக்டர் வழங்கினார்.;

Update: 2023-08-10 19:00 GMT

தேவகோட்டை

தேவகோட்டை அருகே கண்ணங்குடி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜீத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வுக்காக வந்த கலெக்டரை கண்ணங்குடி யூனியன் தலைவர் சித்தானூர் சரவணன் மெய்யப்பன் வரவேற்றார். இதைத்தொடர்ந்து சித்தானூர் ஊராட்சியில் தொடக்கப்பள்ளி மற்றும் அங்குள்ள கழிப்பறை கட்டிடங்களை ஆய்வு செய்த கலெக்டர் மாணவ- மாணவிகளுக்கு அறிவுசார் புத்தகங்களை வழங்கினார்.

அந்த ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடம் ஊரணி மராமத்து போன்ற பணிகளை ஆய்வு செய்து அதன் பின்னர் அனுமந்த குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு மாணவ- மாணவிகளுடன் கலந்துரையாடி அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் பல லட்சம் மதிப்பிலான சுற்றுச்சூழல் பணிகளை பார்வையிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தார்.. கலெக்டருடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, கண்ணங்குடி யூனியன் ஆணையாளர் மகாலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்