கருணை இல்லத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
வாணியம்பாடி கருணை இல்லத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.;
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள் பேட்டை பகுதியில் இயங்கி வரும் கருணை இல்லத்தில் நேற்று காலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது கருணை இல்லம் செயல்பாடு, பதிவேடுகள் பராமரிப்பு உள்ளிட்டவையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்கு தங்கியுள்ள ஆதரவற்ற முதியவர்களை சந்தித்து, நலம் விசாரித்து இனிப்பு வழங்கினார்.
முன்னதாக கலெக்டருக்கு இல்ல காப்பாளர் டேவிட் சுபாஷ்சந்திரன் தலைமையில் பணியாளர்கள் வரவேற்றனர்.
ஆய்வின்போது க.தேவராஜி எம்.எல்.ஏ., பெருமாள்பேட்டை வார்டு கவுன்சிலர் ரஜினிகாந்த் உள்பட பலர் உடன் இருந்தனர்.