அதிக அளவில் அறுவை சிகிச்சை செய்த அரசு ஆஸ்பத்திரி டாக்டருக்கு சான்றிதழ்-கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்

அதிக அளவில் அறுவை சிகிச்சை செய்த அரசு ஆஸ்பத்திரி டாக்டருக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் சான்றிதழ் வழங்கினார்.;

Update: 2022-07-01 12:37 GMT

தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி, தேசிய சுகாதார ஆணையம் சார்பில் டாக்டர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சென்னையில் இருந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறையின் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இருந்து காணொலி காட்சி மூலம் கலெக்டர் ஸ்ரேயாசிங் மற்றும் மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் அதிக அளவில் அறுவை சிகிச்சைகளை செய்த நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியின் எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் டாக்டர் சரவணன் மற்றும் தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினருக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் ராஜ்மோகன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பிரபாகரன், சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர் தேவிகா ராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்