குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவுக்கு 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக, கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவுக்கு 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக, கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவுக்கு 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக, கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
தசரா திருவிழா
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா தொடர்பாக மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா வருகிற 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 24-ந் தேதி சூரசம்காரம் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த விழாவில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அந்த பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை போன்ற வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு சுமார் 250 சிறப்பு பஸ்ள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு 150 பஸ்கள் தான் இயக்கப்பட்டன. இந்த ஆண்டு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மார்க்கத்தில் அதிக பஸ்களை இயக்க திட்டமிட்டு உள்ளோம். சிறப்பு ரெயில் இயக்க தெற்கு ரெயில்வேக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளோம். அவர்களும் இயக்குவதாக உறுதியளித்து உள்ளனர். இது தொடர்பாக தென்னக ரெயில்வே சார்பில் விரைவில் அறிவிப்பு வரும்.
குடிநீர் வசதி
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தினமும் 5 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் தண்ணீர் பந்தல்கள் அமைத்து கேன் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு 150 தற்காலிக கழிப்பறைகள் தான் அமைக்கப்பட்டன. இந்த ஆண்டு 300 தற்காலிக கழிப்பறைகளை 7 இடங்களில் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கடற்கரையை தூய்மையாக வைத்திருக்க 130 பணியாளர்கள் நியமிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மின்சாரம் தடையின்றி கிடைக்க தனியாக மின் மாற்றி ஒன்று அமைக்கவும், செல்போன் நெட்வொர்க் தடையின்றி கிடைக்க பி.எஸ்.என்.எல் சார்பில் தற்காலிக செல்போன் கோபுரம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தற்காலிக பஸ்நிலையம்
10 டாக்டர்கள் நியமிக்கப்பட்டு தினமும் மருத்துவ முகாம் நடத்தப்படும். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வார்கள். கடற்கரை பகுதியில் முட்செடிகள் அகற்றப்பட்டு வாகன நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட உள்ளது. தற்காலிக பஸ் நிலையமும் அமைக்கப்படும். போலீஸ் துறை சார்பில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த பணிகள் அனைத்தும் அடுத்த ஒரு சில நாட்களில் செய்து முடிக்கப்பட்டு, கொடியேற்றத்துக்கு முன்பாக அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.