வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

சின்னசேலம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தாா்.

Update: 2022-06-02 17:23 GMT

சின்னசேலம்:

சின்னசேலம் ஒன்றியம் அம்மையகரம், நயினார்பாளையம் ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார். அதன்படி அம்மையகரம் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் அடர்காடுகள் வளர்க்க மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்தல், தார்சாலை மேம்பாடு செய்தல், சமுதாய கூடம், நூலகம், அங்கன்வாடி மையம், நியாய விலைக்கடை, பெரியார் சிலை மற்றும் சமத்துவபுர வீடுகள் பழுது நீக்கம் செய்யும் பணியை பார்வையிட்ட அவர், பணிகளை விரைந்து முடித்திட உத்தரவிட்டார்.

நயினார்பாளையம் ஊராட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நெகிழி அரவை எந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, மறுசுழற்சி செய்யப்படும் நெகிழிகளை சாலை பணிகளுக்கு

பயன்படுத்தப்பட்டு வருவது பற்றி கேட்டறிந்தார். ஆய்வின்போது ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செல்வகுமரன், உதவி செயற்பொறியாளர் புஷ்பராஜ், சின்னசேலம் ஒன்றியக்குழு தலைவர் மா.சத்தியமூர்த்தி, சின்னசேலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்