காந்தி சிலைக்கு கலெக்டர் மரியாதை

காந்தியின் முழு உருவ சிலைக்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.;

Update: 2023-10-02 17:51 GMT

மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாள் விழாவையொட்டி பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தியின் முழு உருவ சிலைக்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதையடுத்து கலெக்டர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள காதி கிராப்ட் விற்பனை அங்காடியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தியததோடு, அங்கு தீபாவளி சிறப்பு விற்பனையினை தொடங்கி வைத்தார். அப்போது கலெக்டர் கற்பகம் கூறுகையில், இந்த ஆண்டு காதி கிராப்ட் அங்காடிக்கு தீபாவளி சிறப்பு விற்பனை இலக்காக ரூ.95 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து கதர், பாலியஸ்டர், பட்டு ரகங்களுக்கு 30 சதவீதம் மற்றும், உல்லன் ரகங்களுக்கு 20 சதவீதம் அரசு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அரசுத்துறை பணியாளர்களுக்கு மாத ஊதியத்தில் 8 சம தவணைகளில் திரும்ப செலுத்தும் வகையில் கடன் முறையில் கதர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அனைவரும் கதர் கிராம தொழில் வாரியத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் பொருட்களை கொள்முதல் செய்து பயனடைவதுடன் இம்மாவட்டத்திற்கு நிர்ணயம் செய்யப்பட்ட இலக்ைக எய்திட ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்றார். இதில் பிரபாகரன் எம்.எல்.ஏ., வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, பெரம்பலூர் நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன், துணைத் தலைவர் ஹரிபாஸ்கர், நகர்மன்ற உறுப்பினர்கள், காதி கிராப்ட் பெரம்பலூர் கிளை மேலாளர் இளங்கோ, தாசில்தார் கிருஷ்ணராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்