நுகர்பொருள் கிட்டங்கியில் கலெக்டர் திடீர் ஆய்வு
போடியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில், தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா நேற்று திடீர் ஆய்வு செய்தார்.;
போடியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில், தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா நேற்று திடீர் ஆய்வு செய்தார். இந்திய உணவுக் கழகத்தில் இருந்து வரப்பெற்ற அரிசி, கோதுமையின் தரம், இருப்பு, சரியான அளவில் ரேஷன் கடைளுக்கு அனுப்பப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்தார். மேலும், இருப்பு பதிவேடு, காலி சாக்குகள் பதிவேடு, வந்து செல்லும் வாகனங்களின் கண்காணிப்பு பதிவேடு, தரக்கட்டுப்பாட்டு பதிவேடு ஆகியவற்றையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, இளநிலை உதவியாளர் அன்பழகன் மற்றும் கிட்டங்கி பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.