தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு -கார வகைகள் தயாரித்து விற்பனை செய்வோர் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்ய வேண்டும்- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்

தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு -கார வகைகள் தயாரித்து விற்பனை செய்வோர் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்ய வேண்டும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.;

Update: 2022-10-17 20:49 GMT

தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு -கார வகைகள் தயாரித்து விற்பனை செய்வோர் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்ய வேண்டும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

உரிமம்

இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

தீபாவளி மற்றும் அதனை தொடர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகை காலமாக உள்ளதால், இனிப்பு பலகாரம், கார வகைகள், கேக் உள்ளிட்ட பேக்கரி உணவு பொருட்களை மக்கள் விரும்பி வாங்குவர். தீபாவளிக்காக கடை அமைத்தும், சீட்டு நடத்துவோர், பிற வகைகளில் தயாரித்தும் விற்பனை செய்வோர் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து, உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும்.

கார வகைகள், இனிப்பு, பேக்கரி பொருட்கள் தயாரிப்போர் தரமான மூலப்பொருட்களை கொண்டு சுகாதாரமாக தயாரிக்க வேண்டும். கலப்பட பொருட்கள், அனுமதிக்கப்படாத நிறமிகள் பயன்படுத்தக்கூடாது. ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மறுபடியும் சூடுபடுத்தி உணவு தயாரிக்கக்கூடாது.

இணையதளம்

பேக்கிங் உணவு பொருளில், விவரச்சீட்டு இடும்போது தயாரிப்பாளர் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்த தேதி, பயன்பாட்டு காலம், சைவ மற்றும் அசைவ குறியீடு அவசியம் தேவை. பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரம் தயாரிப்போர் http://foscos.fssai.gov.in என்ற இணைய தளம் மூலம் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்தும், பயிற்சி பெற்றும் தயாரிக்க வேண்டும். மேலும் 94440 42322 என்ற எண்ணில் வாட்ஸ் ஆப் மூலம் புகார்களை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்