மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க கலெக்டர் உத்தரவு

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.;

Update: 2022-12-30 17:44 GMT

திருப்பத்தூர் தபேல்தார் முத்துசாமி தெருவில் பல ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட குண்டுபாய் என்ற பெண் உள்ளார். இவர் கடந்த ஒரு மாதமாக பஸ்நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையில் அங்கும், இங்கும் சுற்றி திரிந்து வந்தார். இதனை கலெக்டர் அமர்குஷ்வாஹா அலுவலகத்திற்கு வரும்போதெல்லோம் பார்த்துள்ளார். அதைத்தொடர்ந்து நேற்று அந்தப்பெண்ணை மீட்டு மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் ஒப்படைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி நேற்று பஸ்நிலைய பகுதியில் சுற்றிதிரிந்த அந்தப்பெண்ணை மீட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு கலெக்டர் முன்னிலையில் உதவும் உள்ளங்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்ல நிர்வாகி ரமேஷிடம் ஒப்படைத்து, அந்தப்பெண்ணுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் ஜெயசூர்யா மற்றும் உதவும் உள்ளங்கள் சமூகப் பணியாளர்கள் உடன் இருந்தனர். கலெக்டரின் மனிதநேயத்தை பொதுமக்கள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்