ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு

குன்னூரில் உள்ள ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும் பொருட்களின் இருப்பு குறித்து கேட்டறிந்தார்.

Update: 2022-12-08 18:45 GMT

ஊட்டி

குன்னூரில் உள்ள ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும் பொருட்களின் இருப்பு குறித்து கேட்டறிந்தார்.

கலெக்டர் ஆய்வு

நீலகிரி மாவட்டம் குன்னூர் ெரயில்வே ஊழியர் கூட்டுறவு பண்டகசாலை மற்றும் அருவங்காடு கோபாலபுரம் பகுதியில் உள்ள முன்னாள் ராணுவத்தினர் கூட்டுறவு பண்டகசாலை ஆகிய ரேஷன் கடைகளில் மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ெரயில்வே ஊழியர் கூட்டுறவு பண்டகசாலை ரேஷன் கடையில் ஆய்வு செய்தபிறகு பொருட்களின் இருப்பு விவரம், விலைப்பட்டியல், கடை செயல்படும் நேரம், வார விடுமுறை நாள், கண்காணிப்பு குழு உறுப்பினர் விவரம், தீயணைப்பு உபகரணம், முதலுதவி பெட்டி, அத்தியாவசிய பொருட்களின் மாதிரிகள் போன்ற விவரங்களை காட்சிப்படுத்த வேண்டும். புகார் பதிவேடு, கண்காணிப்பு குழு பதிவேடு, அங்கீகார சான்று, உணவு பாதுகாப்பு சான்று, எடை எந்திர சான்று போன்றவற்றை விற்பனையாளர்கள் பராமரிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

உத்தரவு

இதையடுத்து அருவங்காடு கோபாலபுரம் முன்னாள் ராணுவத்தினர் கூட்டுறவு பண்டக சாலை ரேஷன் கடையில் விற்பனை முனைய எந்திரத்தில் நடப்பு மாதம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, மீதமுள்ள அரிசி, பச்சரிசி, சர்க்கரை, கோதுமை, மண் எண்ணெய், துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றின் இருப்பு மற்றும் பொருட்களின் தரம், எடை, கடையின் செயல்பாடு குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் ரேஷன் கடைக்கு வந்த பொதுமக்களிடம் கடையின் செயல்பாடுகள், வழங்கப்பட்டு வரும் அரிசி மற்றும் பொருட்களின் தரம் குறித்து கேட்டறிந்து, அவர்களு்ககு பொருட்களை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என்று விற்பனையாளர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின் போது, குன்னூர் தாசில்தார் சிவக்குமார், குன்னூர் வட்ட வழங்கல் அலுவலர் வசந்தன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்