நகர பஞ்சாயத்து பகுதியில் கலெக்டர் ஆய்வு
சாம்பவர் வடகரை நகர பஞ்சாயத்து பகுதியில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
சுரண்டை:
சாம்பவர்வடகரை நகர பஞ்சாயத்து பகுதியில் தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். சாம்பவர்வடகரை போலீஸ் நிலையம் எதிரே எம்.எல்.ஏ. நிதியில் கட்டப்படும் பயணிகள் நிழற்குடை, பேரூராட்சி அலுவலகத்தில் செயல்படும் உரக்கிடங்கு, நூலக கட்டிடம், மகளிர் உரிமை தொகை விண்ணப்ப படிவம் பெறும் சிறப்பு முகாம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது நகர பஞ்சாயத்து தலைவர் சீதாலட்சுமி முத்து, செயல் அலுவலர் ராஜேஸ்வரி, பொறியாளர் கோபி, பேரூர் செயலாளர் முத்து, கவுன்சிலர்கள் பழனிகுமார், ரபீக் ராஜா, மெர்சி சுந்தர் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.