மண்சரிவு ஏற்படும் பகுதிகளில் கலெக்டர் ஆய்வு

குந்தா தாலுகாவில் மண்சரிவு ஏற்படும் பகுதிகளில் கலெக்டர் அம்ரித் ஆய்வு செய்தார்.;

Update: 2022-07-12 14:14 GMT

ஊட்டி, 

நீலகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை சார்பில், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் குடிநீர், மின்சாரம், சாலை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இத்தலார் ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.33 கோடி செலவில் பேலிதளா சாலை முதல் வினோபாஜி நகர் வரை சாலை அமைக்கப்பட்டது. இந்த பணியை கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணி தரமாக உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார். இதைதொடர்ந்து தென்மேற்கு பருவமழை காலத்தில் மண்சரிவு ஏற்படும் குந்தா தாலுகாவில் இந்திரா நகர், வினோபாஜி நகர் பகுதிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பருவமழையால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். ஆய்வின் போது குந்தா தாசில்தார் இந்திரா, ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார், சிவக்குமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்