ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு

நத்தத்தில், ரேஷன்கடையில் கலெக்டர் விசாகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-08-25 16:39 GMT

நத்தத்தில் உள்ள ரேஷன்கடை மற்றும் ஆதிதிராவிட மாணவர் தங்கும் விடுதியில் கலெக்டர் விசாகன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரேஷன்கடையில் பொருட்கள் முறையாக வினியோகம் செய்யப்படுகிறதா? என்றும், மாணவர் விடுதியில் தரமான முறையில் உணவுகள் வழங்கப்படுகிறதா என்றும் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து நத்தம் பஸ்நிலைய பகுதியில் கட்டப்படுகிற புதிய கட்டிடங்களை கலெக்டர் விசாகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வேலம்பட்டி ஊராட்சியில் நடந்த நம்ம ஊரு சூப்பர் திட்டத்தின் கீழ் நடந்த தூய்மைப்பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

இதேபோல் நத்தம் அருகே உள்ள சின்னமலையூர் கிராமத்தில் கலெக்டர் விசாகன் ஆய்வு செய்தார். பின்னர் அவர், அங்கு வசிக்கிற மலைவாழ் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மலையூர் கிராமத்தில் விரைவில் புதிய ரேஷன் கடை அமைக்கப்படும் என்றும், மாதந்தோறும் 2 செவிலியர்கள் நியமிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாலை வசதி ஏற்படுத்தப்படும். மலைக்கிராம மக்களுக்கு தனிநபர் கடன் வழங்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் ஏற்படுத்தப்படும் என்று கலெக்டர் உறுதி அளித்தார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் ரெங்கராஜன், தாசில்தார் சுகந்தி, மண்டல துணை தாசில்தார் அண்ணாமலை, வருவாய் ஆய்வாளர் ரஞ்சித்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன், பேரூராட்சி செயல் அலுவலர் சரவணக்குமார் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்