வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;

Update: 2023-04-19 18:45 GMT

ஆர்.எஸ்.மங்கலம், 

ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி பாரனூர் ஊராட்சி களங்காப்புலி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மைதானத்தில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம், ஆய்ங்குடி ஊராட்சி சுத்தமல்லி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மைதானத்தில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டிட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், மாணவ, மாணவிகளை சந்தித்து பேசினார்.

தொடர்ந்து சுத்தமல்லி கிராமத்தில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் வாய்க்கால், சுத்தமல்லி கிராமத்தில் புத்தர் சிலை அமைந்துள்ள இடம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும் சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்வதை கருத்தில் கொண்டு சுற்றுலாத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஒருங்கிணைந்து பொதுமக்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். ஆய்வின் போது ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் சிரோன்மணி, ஊராட்சி ஒன்றிய பொறியாளர் திலீபன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி அலுவலர் விஜயகுமார் உள்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்