ரூ.42 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்

ரூ.42 லட்சத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.;

Update: 2023-01-24 19:15 GMT

நாகை மாவட்டம் மருதூர் தெற்கு ஊராட்சியில் ரூ.42 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி செயலகத்தின் கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கூடுதல் கலெக்டர் பிரிதிவிராஜ், ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜு, பாஸ்கரன் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் அருகில் உள்ள மருதூர் தெற்கு அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் அவர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்