பெரிய கண்மாயில் கலெக்டர் ஆய்வு

பெரிய கண்மாயில் கலெக்டர் ஆய்வு செய்தார்;

Update: 2023-01-03 18:45 GMT

ராமநாதபுரம் பெரிய கண்மாய் தண்ணீரை நம்பி 4 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. விவசாயிகளின் நலன் கருதி இங்குள்ள கலுங்கு மற்றும் மடைகளை பொதுப்பணி துறையினர் தொடர்ந்து கண்காணித்து பராமரித்து வருகின்றனர். பெரிய கண்மாயின் 6-வது மடை சேதமடைந்து இருந்தது. அதனை பொதுப்பணித்துறை சார்பில் ரூ.10 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த மடையை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கண்மாயின் கலுங்கு, மற்ற மடைகளையும் கண்காணித்து பராமரித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜெயதுரை, உதவி செயற்பொறியாளர் பரமேஸ்வரன் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்