வேதாரண்யம் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பனை விதைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதை கல்லூரி முதல்வர் காமராஜ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வர் குமரேசமூர்த்தி, பேராசிரியர்கள் பிரபாகரன், ராஜா, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மாரிமுத்து மற்றும் மாணவர்கள் 2 ஆயிரம் பனை விதைகளை சேகரித்தனர். இந்த பனை விதைகள் விரைவில் விதைக்கப்பட இருப்பதாக கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.