திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் நாளை முதலே அபராதம் வசூல் - சென்னை காவல்துறை அறிவிப்பு

திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் நாளை முதலே அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.;

Update: 2022-10-25 17:03 GMT

சென்னை,

திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின்படி சாலை விதிகளை மீறும் வாகன் ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் அபராத தொகைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் இருந்து வரும் 28-ந்தேதி முதல் அபராத தொகை வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் நாளை முதலே அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த புதிய சட்டத்தின் படி போதையில் வாகனம் ஓட்டுபவர் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் அபராதம் விதிக்கப்படும். அதே போல் போக்குவரத்து விதிகளை மீறினால் குறைந்தபட்சம் ரூ.1,000-ல் இருந்து ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்