சுல்தான்பேட்டையில் இடிந்து விழும் நிலையில் தோட்டக்கலைத்துைற அலுவலகம்-உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சுல்தான்பேட்டையில் இடிந்து விழும் நிலையில் உள்ள தோட்டக்கலைத்துைற அலுவலகத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.;

Update: 2023-05-01 18:45 GMT

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டையில் இடிந்து விழும் நிலையில் உள்ள தோட்டக்கலைத்துைற அலுவலகத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

தோட்டக்கலைத்துறை அலுவலகம்

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் விவசாயமே பிரதான தொழில் ஆகும். விவசாயிகளுக்கு உரிய சாகுபடி ஆலோசனை, அரசின் மானியங்கள் ஆகியவை சுல்தான்பேட்டை ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள வட்டார வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலகங்கள் மூலம் வழங்கப்படுகிறது. வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலகங்கள் ஒரே கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இரு துறைகளில் சேர்த்து 15-க்கும் மேற்பட்ட அலுவலர்கள், ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தோட்டக்கலைத் துறை, வேளாண்மை அலுவலகம் கட்டிடங்கள் தற்போது ஆங்காங்கே மிகவும் சிதிலம் அடைந்துள்ளது.

நிதி ஒதுக்கீடுக்கு கருத்துரு

அலுவலக வாயில் முன்பகுதி மற்றும் அதன்மேற்கூரை, அலுவலக வளாகம் உள்புறம் உள்பட பல இடங்களில் சிதிலம் அடைந்து உள்ளன. அவ்வப்போது கட்டிடத்தின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இடிந்து விழுந்து வருவதால் அலுவலகத்திற்கு வரும் விவசாயிகள் மற்றும் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் எப்போதும் தாங்கள் காயம் அடைவோமோ என்ற கடும் அச்சத்துடன் வேலை பார்க்கும் நிலை தொடர்ந்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை மாற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

இந்த நிலையில் பழுதடைந்த கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் ரூ.13 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய அரசுக்கு கருத்துரு அனுப்பி உள்ளதாக தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்