கோவை-ராமேசுவரம் ரெயில்கள் ராமநாதபுரம் வரை மட்டுமே இயங்கும்

பாம்பன் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதால், கோவை-ராமேசுவரம் ரெயில்கள் ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது.;

Update:2022-12-26 00:15 IST

கோவை

பாம்பன் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதால், கோவை-ராமேசுவரம் ரெயில்கள் ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது.

சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ராமேசுவரம் ரெயில்

மோசமான வானிலை காரணமாக பாம்பன் பாலத்தில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இதன் விளைவாக கோவை-ராமேசுவரம் இடையே செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

வழக்கம்போல் ரெயில் எண்-16618 கொண்ட கோவை-ராமேசுவரம் வாராந்திர எக்ஸ்பிரஸ், நாளை(செவ்வாய்க்கிழமை) இரவு 7.45 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும். அந்த ரெயில், கோவையில் இருந்து ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படும். ஆனால் ராமநாதபுரத்தில் இருந்து ராமேசுவரம் வரை இயக்கப்படாது.

ஹெல்ப்லைன் எண்கள்

இதேபோன்று ரெயில் எண்-16617 கொண்ட ராமேசுவரம்-கோவை வாராந்திர எக்ஸ்பிரஸ், ராமேசுவரத்தில் இருந்து நாளை மறுநாள்(புதன்கிழமை) இரவு 7.10 மணிக்கு புறப்பட வேண்டும். ஆனால் ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டு கோவைக்கு வரும். ராமேசுவரத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு இயக்கப்படாது. இதையொட்டி பயணிகளுக்கு உதவ ராமேசுவரம் மற்றும் மண்டபத்தில் உள்ள9360548465, 9360544307 ஹெல்ப்லைன் எண்களை பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்