கோவை புலியகுளம் அந்தோணியார் ஆலய தேர்பவனி

கோவை புலியகுளம் அந்தோணியார் ஆலய தேர்பவனி நடந்தது.;

Update: 2023-06-18 23:15 GMT

கோவை புலியகுளம் அந்தோணியார் ஆலய தேர்பவனி நடந்தது.

தேர் பவனி

கோவை புலியகுளத்தில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. சுமார் 164 ஆண்டுகள் பழமையான இந்த ஆலய தேர்த்திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பின்னர் ஒவ்வொரு நாளும் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவு நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பங்குகுருக்கள் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் பேசினார்கள்.

தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று இரவு நடந்தது.

கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

இதற்காக அந்தோணியார், சூசையப்பர், அன்னை தெரசா, மிக்கேல் அதிதூதர், சகாயமாதா, செபஸ்டியான், குழந்தை ஏசு, தங்க மயில் மாதா, சகாய மாதா உள்பட 15 தேர்கள் மின்விளக்குகளால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.

மேட்டுக்காடு, ரெட்பீல்டு, புதுரோடு, ராமநாதபுரம் போலீஸ் நிலையம் வழியாக மீண்டும் ஆலயத்துக்கு சென்று தேர்பவனி முடிந்தது. இந்த தேர்பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

தேர் பவனியையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வருகிற 25-ந் தேதி கொடியிறக்கத்துடன் தேர் திருவிழா நிறைவு பெறுகிறது. 

மேலும் செய்திகள்