ஆனைமலை கொப்பரை கொள்முதல் மையத்தில் கோவை மாவட்ட முதுநிலை ஆய்வாளர் ஆய்வு

ஆனைமலை கொப்பரை கொள்முதல் மையத்தில் கோவை மாவட்ட முதுநிலை ஆய்வாளர் ஆய்வு செய்தார்.;

Update:2023-04-09 00:15 IST

ஆனைமலை

கோவை மாவட்டத்தில் ஆனைமலை, பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, நெகமம், செஞ்சேரி உட்பட 10 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மத்திய அரசின் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கடந்த 1-ந் தேதி கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டது. இதில் அரவை கொப்பரை கிலோவிற்கு 108 ரூபாய் 60 காசுகளும், பந்து கொப்பரை கிலோவிற்கு 117 ரூபாய் 80 காசுகளும் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆனைமலை கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையத்தில் கடந்த 7 நாட்களில் 42,350 கிலோ கொப்பரையை கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் கொண்டு வந்துள்ளனர். இதனை கோவை மாவட்ட விற்பனை குழு முதுநிலை ஆய்வாளர் ஆறுமுக ராஜன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசின்திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற தங்கள் நிலத்தின் நிலச்சிட்டா, அடங்கள் ஆதார் அட்டை வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்டவைகளை விற்பனை கூட கண்காணிப்பாளரிடம் அணுகி பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொள்முதல் செய்யப்படும் கொப்பரை தேங்காய்க்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்