சாவிலும் இணைபிரியா தம்பதி: கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் சாவு

சாவிலும் இணைபிரியா தம்பதி: கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் சாவு.;

Update:2022-07-27 01:14 IST

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கீழ காலனியை சேர்ந்தவர் குணசீலன் (வயது 74). இவருடைய மனைவி தமிழரசி (68). இவர்களுக்கு திருமணம் ஆகி 48 ஆண்டுகள் ஆகிறது.

இந்த தம்பதிக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

இந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக குணசீலன் நேற்று அதிகாலை 3 மணி அளவில் உயிரிழந்தார். தனது கணவர் மறைவால் தமிழரசி அதிர்ச்சி அடைந்தார். கணவர் தன்னை விட்டு விட்டுச்சென்ற துக்கம் தாங்காமல் அடுத்த சில மணி நேரங்களிலேயே தமிழரசியும் மயங்கி விழுந்து உயிரிழந்தார். கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த இந்த சம்பவத்தால் கிராம மக்கள் ேசாகமடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்