விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சி

அம்பையில் விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-08-06 18:41 GMT

அம்பை:

அம்பாசமுத்திரம் ஒன்றியம் வெள்ளாங்குளி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் ஒன்றியக் குழு தலைவர் பரணி சேகர், விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கி பேசினார். அம்பாசமுத்திரம் வேளாண்மை உதவி இயக்குனர் கற்பக ராஜ்குமார் ஆலோசனை பேரில் நடைபெற்ற இவ்விழாவில் வேளாண்மை அலுவலர் ஷாகித் முகைதீன் பங்கேற்று பேசினார். மேலும் வெள்ளாங்குளி கிராம பஞ்சாயத்தை சேர்ந்த 22 விவசாயிகள் கிசான் கடன் அட்டை பெறுவதற்கான ஆவணங்களை அளித்தனர். நிகழ்ச்சியில் வெள்ளாங்குளி பஞ்சாயத்து தலைவர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் விஜயலெட்சுமி, குமார், அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் தங்க சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்