அவல்பூந்துறை ஒழுங்குமுறை கூடத்தில் ரூ.1½ லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை கூடத்தில் ரூ.1½ லட்சத்துக்கு தேங்காய் ஏலம்;

Update:2023-10-09 02:28 IST

மொடக்குறிச்சி

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. விவசாயிகள் 13 ஆயிரத்து 229 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதில் ஒரு கிலோ தேங்காய் குறைந்தபட்ச விலையாக ரூ.22.51-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.26.66-க்கும், சராசரி விலையாக ரூ.25.40-க்கும் ஏலம் போனது.

மொத்தம் 5,935 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 1 லட்சத்து 46 ஆயிரத்து 26 ரூபாய்க்கு விற்பனையானது.

Tags:    

மேலும் செய்திகள்