பரமத்திவேலூர்:
பரமத்திவேலூரில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்திற்கு பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த தென்னை விவசாயிகள் தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வருவார்கள். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி இன்று(செவ்வாய்க்கிழமை) அரசு விடுமுறை என்பதால் தேங்காய் ஏலம் ரத்து செய்யப்படுகிறது.
இந்த தகவலை தேசிய வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.