தேங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்

தேங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்;

Update: 2023-08-20 10:34 GMT

குண்டடம்

தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்க வலியுறுத்தி குண்டடத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் சிதறு தேங்காய் உடைத்து போராட்டம் நடத்தினர். குண்டடம் பஸ் நிறுத்தம் அருகே கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் தேங்காயின் அடிப்படை ஆதார விலையை உயர்த்த வேண்டும். ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை வழங்க வேண்டும். கள் இறக்க அனுமதி வேண்டும் உள்ளிடட கோரிக்கைகளை முன் வைத்து கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் திருப்பூர் மாவட்ட கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தின் தலைவர் ஈஸ்வரன், திருப்பூர் மாவட்ட துணைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

---------------

Tags:    

மேலும் செய்திகள்