அரசு பள்ளி மாணவர்களுக்கு போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு

வேலூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு 8 மையங்களில் நடந்தது.

Update: 2022-11-26 16:52 GMT

வேலூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு 8 மையங்களில் நடந்தது.

போட்டித்தேர்வுகள்

நீட் உள்ளிட்ட உயர்கல்வியில் சேர்வதற்கான தேர்வுகள் மற்றும் போட்டித்தேர்வுகளுக்கு தயார்படுத்தும் வகையில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு இன்று நடத்தப்பட்டது.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு ஒன்றியத்தில் ஊசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேலூர் ஒன்றியத்தில் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி (ஆங்கில வழி), அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, கணியம்பாடி ஒன்றியத்தில் பென்னாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி,

காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கே.வி.குப்பம் ஒன்றியத்தில் கே.வி.குப்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குடியாத்தம் ஒன்றியத்தில் நடுப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பேரணாம்பட்டு ஒன்றியத்தில் பேரணாம்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் பயிற்சி வகுப்பு நடந்தது.

இதில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு படிக்கும் 600 மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு பயிற்சி அளிக்க 167 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கல்வி அதிகாரி ஆய்வு

வேலூர் முஸ்லிம் பள்ளியில் நடந்த பயிற்சி வகுப்பினை வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பயிற்சி வகுப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஏதேனும் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுமாறும் அவர் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்