போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு

போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் பெரம்பலூரில் நாளை மறுநாள் தொடங்குகிறது.;

Update: 2023-07-16 18:21 GMT

இலவச பயிற்சி

பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இந்த ஆண்டு திட்ட நிரலில் குரூப்-1, குரூப்-2 தேர்வுகளுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் (ஆகஸ்டு) வெளியாகவுள்ள நிலையில், இந்த போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நாளை மறுநாள் (புதன்கிழமை) முதல் தொடங்கப்படுகிறது. இவ்வகுப்புகள் வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.

தொடர்பு...

தற்போது அலுவலகத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வுகள் தினமும் நடத்தப்பட்டு வருகிறது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள வேலை நாடுனர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய ஆதார் அட்டை, புகைப்படங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலகத்தை 9499055913 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்