மத்திய அரசு பணி தேர்வுக்கான பயிற்சி வகுப்பு
மத்திய அரசு பணி தேர்வுக்கான பயிற்சி வகுப்பு;
திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மத்திய அரசு பணி தேர்வுக்கான பயிற்சி வகுப்பு வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது என்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
150 மாணவர்களுக்கு
மத்தியஅரசு வேலைக்கான போட்டி தேர்வுகளை தமிழக இளைஞர்கள் எளிதில் அணுகுவதற்கு வசதியாக பயிற்சி அளிக்கும் நோக்கில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டி தேர்வுகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் இலவச பயிற்சி அளிக்க தமிழ்நாடு ஏற்பாடு செய்துள்ளது.
இதன் மூலம் எஸ்.எஸ்.சி., ஆர்.ஆர்.பி. வங்கி தேர்வு ஆகியவற்றிற்கு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் முதல் கட்டமாக எஸ்.எஸ்.சி., ஆர்.ஆர்.பி. வங்கி தேர்வு ஆகியவற்றிற்கு ஒருங்கிணைந்த பயிற்சி திருவாரூர் மாவட்டத்தில் அளிக்கப்பட உள்ளது. இதன் மூலம் 150 மாணவர்களுக்கு நேரடி வகுப்பறை பயிற்சி, சிறந்த வல்லுனர்களை கொண்டு வழங்கப்பட உள்ளது.
பயிற்சி வகுப்புகள்
இதற்கான செலவினங்களை நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசே ஏற்றுக்கொள்ளும். இந்த பயிற்சியில் 300 மணி நேரம் தனி வழிகாட்டல் மற்றும் 100-க்கும் மேற்பட்ட மாதிரி தேர்வுகள் என 100 நாட்களுக்கு நடக்கிறது. இந்த பயிற்சியில் சேருவதற்கு வருகிற 20-ந்தேதிக்குள் https://candidate.tnskill.tn.gov.in/CE- NM/TNSDC-REGISTRATION.ASPX என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
இந்த பயிற்சி வகுப்புகள் வருகிற 25-ந்தேதி முதல் தொடங்குகிறது. மேலும் விவரங்களுக்கு https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்திலும், மன்னார்குடி சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.