மூவலூர் ராமாமிர்தம், முத்துலெட்சுமி ரெட்டி, வ.உ.சி.க்கு ரூ.66 லட்சம் செலவில் சிலை - முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிலைகளை திறந்து வைத்தார்.;
சென்னை,
தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் கோவையில் வ.உ.சிதம்பரனாருக்கும், மயிலாடுதுறையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கும், புதுக்கோட்டையில் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டிக்கும் ரூ.66 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள உருவச்சிலைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.
மேலும் ஈரோடு மாவட்டத்தில் தியாகி ஈஸ்வரனுக்கும், நாமக்கல் மாவட்டத்தில் சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் சுப்பராயனுக்கும் 5 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட உள்ள உருவச்சிலையுடன் கூடிய அரங்கத்திற்கு சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதல்-அமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்.