4-ந்தேதி மதுக்கடைகள் மூடல்
வருகிற 4-ந்தேதி அன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும்.
வருகிற 4-ந்தேதி அன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானம் அருந்தும் கூடம் உரிமம் பெற்ற ஓட்டல்கள், கிளப் மற்றும் கேண்டீன்களில் இயங்கும் மதுக்கூடங்களை மேற்படி தினத்தில் முழுவதுமாக மூட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் உரிமம் பெற்ற கிளப், ஓட்டல் மற்றும் கேண்டீன்களில் இயங்கும் மதுக்கூடங்கள் ஆகியவை வருகிற 4-ந்தேதி அன்று முழுவதுமாக மூடப்படும். இத்தகவலை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.