உடன்குடி குருநாதபுரத்தில் இந்துசமய பண்பாடு வகுப்பு நிறைவு விழா

உடன்குடி குருநாதபுரத்தில் இந்துசமய பண்பாடு வகுப்பு நிறைவு விழா நடைபெற்றது.;

Update: 2022-06-09 11:23 GMT

உடன்குடி:

உடன்குடி ஒன்றிய இந்து முன்னணி சார்பில் 25 கிராமங்களில் 10 நாட்கள் நடைபெற்ற இந்து சமய பண்பாடு வகுப்புகளின் நிறைவு விழா குருநாதபுரத்தில் நடைபெற்றது.

உடன்குடி ஒன்றிய இந்து முன்னணி பொதுச்செயலர் கேசவன் தலைமை வகித்து பண்பாட்டு வகுப்பில் பங்கேற்ற சிறுவர், சிறுமிகள், ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். பண்பாட்டு வகுப்புகளில் கற்பிக்கப்பட்ட ராமாயணம், மகாபாரதம், கந்தபுராணம், திருவாசகம், ஆழ்வார்கள், நாயன்மார்கள், இந்து ஒற்றுமை, பாரத நாட்டின் பழம் பெருமை ஆகியவை குறித்து வினாடி-வினா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்து அன்னையர் முன்னணி மாவட்ட தலைவி சந்தனக்கனி, மாவட்ட செயலர் சொர்ணசுந்தரி, ஒன்றிய செயலர் ஜெயசித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இந்து அன்னையர் முன்னணி கிளை பொறுப்பாளர்கள் செல்வகுமாரி, சிங்காரக்கனி, கலைராணி, ரதிதேவி, பரிதா, வனசுந்தரி, மாசானபேச்சி, வினிதா, பத்மா, மணிகண்டேஸ்வரி, தமிழ்செல்வி, காயாமொழி இந்து முன்னணி தலைவர் திருமால் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்