முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவு விழா: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணியை பாராட்டி ஊக்கத்தொகையினை முதல் அமைச்சர் வழங்கினார்.
சென்னை,
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது, தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணியை பாராட்டி, ரூ.60 லட்சம் ஊக்கத்தொகையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அத்துடன், முதலமைச்சர் கோப்பையில் முதல் 3 இடங்களை பிடித்த சென்னை, செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களுக்கு வெற்றி கோப்பைகளை வழங்குகிறார்.