கிராமங்களில் தூய்மை பணி தொடக்கம்

கிராமங்களில் தூய்மை பணி தொடங்கியது.;

Update: 2022-08-25 13:16 GMT

சிவகிரி:

சிவகிரி தாலுகா நெற்கட்டும் செவல், தலைவன்கோட்டை ஆகிய ஊராட்சிகளில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் கிராமங்களில் தூய்மை பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

வாசுதேவநல்லூர் பஞ்சாயத்து யூனியன் தலைவரும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளருமான பொன். முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

அப்போது, நெற்கட்டும்செவல் பஞ்சாயத்து தலைவர் பாண்டியராஜ், துணைத்தலைவர் முத்துப்பாண்டி, தலைவன்கோட்டை பஞ்சாயத்து தலைவர் சர்மிளா, துணைத் தலைவர் குபேந்திரன், வாசுதேவநல்லூர் ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், வாசுதேவநல்லூர் பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் ஜெயராமன், உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்