தூய்மை விழிப்புணர்வு ஊர்வலம்

திருவண்ணாமலையில் தூய்மை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.;

Update: 2022-09-17 16:22 GMT

திருவண்ணாமலை நகராட்சி சார்பாக தூய்மை பணியாளர்கள் பங்கேற்ற தூய்மை விழிப்புணர்வு ஊர்வலம் இன்று நடைபெற்றது.

நகராட்சி மேலாளர் பிரகாஷ், நகர நல அலுவலர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி சுகாதார ஆய்வாளர் கார்த்தி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக தூய்மை அருணை மேற்பார்வையாளர் கார்த்திவேல்மாறன் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு ஊர்வலம் தேரடி வீதியில் ராஜகோபுரம் முன்பு தொடங்கி கடலைக்கடை சந்திப்பு, திருவூடல் தெரு, பே கோபுர தெரு, பெரிய தெரு வழியாக வந்து மீண்டும் ராஜகோபுரம் முன்பு நிறைவடைந்தது.

முன்னதாக ராஜகோபுரம் முன்பு தூய்மை பணிகள் நகராட்சி நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்