பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் பேரூராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் 4-வது வார்டு வெள்ளாளர் தெரு பகுதியில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. தூய்மைபணி முகாமிற்கு பேரூராட்சித் தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அன்பரசு, பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர், பேரூராட்சி இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்புரவு மேற்பார்வையாளர் குணசேகரன், தூய்மை பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட 80-க்கும் மேற்பட்டோர் ஒன்றாக இணைந்து பொது சுகாதாரப் பணிகளை மேற்கொண்டனர்.
இதில் மழைநீர் வடிகால்கள் தூர்வாருதல், தெருக்களை சுத்தம் செய்தல், குடிநீர் குழாய் பழுதுகள் சரி செய்தல், தெரு மின்விளக்குகள் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. மேலும் வார்டு பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டும், பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கங்களை வழங்கியும், மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அனைவருக்கும் மஞ்சப் பை வழங்கப்பட்டது.