கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரம்

கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.;

Update: 2022-08-11 17:24 GMT

திட்டச்சேரி பேரூராட்சிக்குட்பட்ட திட்டச்சேரி-தேவன்குடி சாலையில் ஆற்றங்கரையோரம் கருவேல மரங்கள் வளர்ந்து சாலை முழுவதும் சாய்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்தது. இந்த மரங்களை அக்ற்ற வேண்டும் என அந்த பகுதி மக்கள் பேரூராட்சி செயல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சாலையோரம் உள்ள கருவேல மரங்களை அகற்ற பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் உத்தரவிட்டார். அதன்பேரில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ், அலுவலர்கள் மாதவன், அமானுல்லா மற்றும் ஊழியர்கள் பொக்லின் எந்திரம் மூலம் கருவேல மரங்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்