சந்தானராமர் கோவில் குளத்தில் தூய்மை பணி
சந்தானராமர் கோவில் குளத்தில் தூய்மை பணி நடந்தது.;
நீடாமங்கலத்தில் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதனையொட்டி சந்தானராமசாமி கோவில் தெப்பக்குளத்தில் தேங்கி கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி தூய்மை பணி நடந்தது. இந்த பணியில் பேரூராட்சி தலைவர் ராமராஜ் தலைமையில் நீடாமங்கலம் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், தன்னார்வலர்கள், தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் செந்தில்குமார், கார்த்திகாதேவி, காந்தி கார்த்திக், திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார மேற் பார்வையாளர் அசோகன், திடக்கழிவு மேலாண்மை பயிற்சியாளர் விஜய் ஆகியோர் செய்திருந்தனர்.