சிக்கல்:
நாகை மாவட்டம், கீழ்வேளூர் பேரூராட்சி பகுதியில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. கீழ்வேளூர் அட்சயலிங்க சாமி கோவில் குளத்தில் பேரூராட்சி பணியாளர்கள் தூய்மை பணிகளை மேற்கொண்டனர். மேலும், அண்ணாநகர் பகுதியில் தூய்மை பணி குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டது. இதில் பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன், பேரூராட்சி துணை தலைவர் சந்திரசேகரன், இளநிலை உதவியாளர் சித்ரகலா மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.