துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கடையநல்லூரில் துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.;
கடையநல்லூர்:
கடையநல்லூர் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 17 வார்டுகளில் தனியார் துப்புரவு பணியாளர்கள் சுமார் 80-க்கும் மேற்பட்டோர் பணி செய்கின்றனர். இவர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு முதல் மாதம் ஒன்றுக்கு ரூ.1,200 வீதம் பிடித்தம் செய்யப்பட்ட பி.எப். பணத்தை வழங்காததை கண்டித்து கடந்த 2 நாட்களாக கடையநல்லூர் நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே நகராட்சி மற்றும் தனியார் நிறுவனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. துப்புரவு பணியாளர் கோவிந்தன் தலைமை தாங்கினார். பணியாளர்கள் மாரியப்பன், குருசாமி, ராமச்சந்திரன், காளிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். அய்யூப்கான் தொடக்க உரையாற்றினார். சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் ராஜசேகர், கிருஷ்ணகுமார், அய்யப்பன், தர்மராஜ், மணிகண்டன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார். இதில் பலர் கலந்து கொண்டனர்.