குளங்கள் சுத்தம் செய்யப்படுமா?
கீழ்வேளூர் அருகே பட்டமங்கலம் ஊராட்சியில் குளங்கள் சுத்தம் செய்யப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
சிக்கல்;
கீழ்வேளூர் அருகே பட்டமங்கலம் ஊராட்சியில் குளங்கள் சுத்தம் செய்யப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
பாசி படர்ந்த குளங்கள்
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே பட்டமங்கலம் ஊராட்சியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு சொட்டால்வண்ணம் பகுதியில் உள்ள பாப்பான் குளம், பழைய அரிசி ஆலை பகுதியில் உள்ள குளம் ஆகிய 2 குளங்கள் தூர்வாரி சுத்தம் செய்யாமல் கடந்த 4 ஆண்டுகளாக பாசிகள் படர்ந்து நிறைந்துள்ளது. இந்த பாசிகளால் தண்ணீரில் குளிக்கும் மக்களுக்கு உடல் முழுவதும் அரிப்பும், தோல் சம்பந்தமான நோய்களும் உடல் உபாதைகளும் ஏற்படுகிறது.
தூர்வாரி சுத்தம் செய்ய கோரிக்கை
இதனால் இந்த பகுதி மக்கள் தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இந்த குளங்களை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என்று கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் இதுவரை இதற்கான தீர்வு கிடைக்கவில்லை என்று கிராம மக்கள் புகார் கூறுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுத்து குளங்களை தூர்வாரி சுத்தம் செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.