அகழாய்வில் கிடைத்த மண் சிற்பம்
சிவகாசி அருகே நடந்த அகழாய்வில் கிடைத்த மண் சிற்பம் கிடைத்து உள்ளது.
தாயில்பட்டி,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் 15-வது அகழாய்வு குழி 10 அடி ஆழத்தில் தோண்டப்பட்டுள்ளது. அதில் காளை உருவ சிற்பம், கற்களால் செய்யப்பட்ட கோடாரி, சுடு மண்ணால் செய்யப்பட்ட சிறுவர்கள் விளையாட பயன்படுத்திய பொம்மைகள், கிடைத்தன. நேற்று சுடுமண்ணால் செய்யப்பட்ட மண் சிற்பம் சேதம் அடைந்த நிலையில் கிடைத்துள்ளது. இதில் தலைப்பகுதி, கால் பகுதி, கைகளில் விரல்கள் இல்லாமல் மண் சிற்பம் கிடைத்துள்ளது. இந்த மண் சிற்பம் உருவ வழிபாட்டிற்கு முன்னோர்கள் பயன்படுத்தி இருக்கலாம் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அகழாய்வில் இதுவரை 2,150 பொருட்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்தனர்.