கோணம் அரசு கலை கல்லூரியில் வகுப்புகள் தொடங்கியது; மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் சென்றனர்

கோணம் அரசு கலை கல்லூரியில் வகுப்புகள் தொடங்கியது

Update: 2023-06-19 18:45 GMT

நாகர்கோவில், 

கோணம் அரசு கலை கல்லூரியில் வகுப்புகள் தொடங்கியது

வகுப்புகள் தொடங்கியது

தமிழகம் முழுவதும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டன. இதைத் தொடர்ந்து மாணவர் சேர்க்கை கலந்தாய்வானது கடந்த மாதம் 30-ந் தேதி தொடங்கி முடிவடைந்தது. இதை தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வருகிற 22-ந் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

இந்தநிலையில் 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு நேற்று வகுப்புகள் தொடங்கியது. நாகர்கோவில் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வகுப்புகள் தொடங்கியதால் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கல்லூரிக்கு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்